Monday, October 06, 2014

மூன்றாவது வளைகுடா போருக்கு காரணமாகவிருக்கும் சமாதி

துர்கோமான்கள்/ துருக்கியர்கள் என அழைக்கபடும் இனத்தவரின் பூர்விகம் மத்தியகிழக்கு ஆசியாவில் சீனா அருகே இருக்கும் துருக்மெனிஸ்தான். இவர்களில் ஒரு பிரிவினர் கிபி 12- 13ம் நூற்றாண்டுவாக்கில் மங்கோலியர் படையெடுப்பில் மத்தியகிழக்கு நாடுகள் சின்னாபின்னமான நிலையில் பாரசிகம் வழியாக சென்று அன்றைய புனித ரோமானிய பேரரசான பைசாண்டிய பேரரசை தாக்கி ஆசியா மைனர் எனும் பகுதியில் ஒரு சிறிய அரசை அமைத்தார்கள்.

அன்றைய உலகில் அது ஒரு முக்கியத்துவம் அற்ற செய்தி. ஆனால் பின்னாளில் ஓஸ்மான் எனும் துருக்கியரால் அமைக்கபட்ட அந்த சிற்ரரசு பேரரசாகி, ஆட்டோமான் துருக்கிய சாம்ராஜ்ஜ்யமாக, இஸ்லாமிய காலிபேட் ஆக மாறியது. பின்னாளில் ஆட்டொமான் சாம்ராஜ்யம் வீழ்ந்து துருக்கி எனும் அரசு அமைந்தது. அன்றைய ஆட்டோமான் அரசு பின்னாளில் அரேபியா, எகிப்து, இஸ்ரேல், ஜோர்ட, சிரியா, லெபனான் என பல நாடுகளாக பிரிந்தது.

அதில் துருக்கி பின்னாளில் நாட்டொ எனும் அமைப்பில் சேர்ந்தது. நேட்டொவின் தலைவர் அமெரிக்கா. பிற உறுப்பினர்கள் இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி முதலானவை. நாட்டோவின் ஒரு நாட்டின் மேல் யாரவாது தாக்குதல் நடத்தினாலும் பிற நாட்டோநாடுகள் அனைத்தும் தாக்கபட்ட நாட்டின் உதவிக்கு வரவேண்டும் என்பது ஒப்பந்தம்.

இப்படி பிரிந்த ஆட்டொமான் சாம்ராஜ்யத்தின் சரித்திர சின்னங்களில் ஒன்று அதாவது முதலாவது துருக்கிய சுல்தான் ஓஸ்மானின் தாத்தா சுலைமான் ஷாவினுடைய சமாதி. துருக்கி பிரிக்கபட்டபோது இந்த சமாதி இன்றைய சிரியாவில் மாட்டிகொண்டது. சிரியாவில் சமாதி இருந்தாலும் அந்த சமாதியை துருக்கி தன் கட்டுபாட்டில் வைத்துக்கொள்ள சிரியா ஒத்துகொண்டது.


​(சுலைமான் ஷா சமாதி)

இந்த சூழலில் சிரியாவில் பாதியை பிடித்த ஐஸிஸ் தீவிரவாதிகள் சுல்தான் சுலைமான் ஷாவின் சமாதியை நெருங்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை எதிர்த்து நிற்கும் ஆற்றல் சிரிய வீரர்களுக்கு இல்லை. சமாதிகளை இடித்து தள்ளுவதை நோக்கமாக கொண்டுள்ள ஐஸிஸ் தீவிரவாதிகள் சுலைமான் ஷாவின் சமாதியை பிடித்தால் அதை இடித்து தள்ளுவார்கள் என அஞ்சும் துருக்கி அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தால் சிரியா மேல் போர் தொடுக்கவிருப்பதாக அறிவித்து உள்ளது.

அது நிகழ்ந்தால் நாட்டோவின் உறுப்புநாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்சு எல்லாம் நேரடியாக படைகளை சிரியா மற்றும் இராக்குக்கு அனுப்பும் சூழல் உருவாகும்.

ஆக மூன்றாவது வளைகுடா போருக்கு காரணமாக இந்த வரலாற்று சின்னம் அமையுமா என உலக ஊடகங்கள் பரபரப்பாக விவாதித்து வருகின்றன்






No comments: